|
வவுனியா நகர் வெறிச்சோடிக் காணப்படுகின்றது: வவுனியா ஊடான போக்குவரத்துகள் இடைநிறுத்தம் |
|
|
|
Tuesday, 09 September 2008 |
|
இராணுவத் தலைமையகம் மீதான விடுதலைப் புலிகளின் தாக்குதல்களைத் தொடர்ந்து வவுனியா நகரே வெறிச்சோடிக் கிடக்கின்றன. வவுனியா - மன்னார் போக்குவரத்துகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வவுனியாவில் வணிக நிலையங்கள், வங்கிகள், அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
வானப் போக்குவரத்துகள் இடம்பெறவில்லை. அரச வாகன சேவைகளும் இடம்பெறவில்லை. மக்கள் நடமாட்டமும் இல்லாது அமைதியாகக் காணப்படுகின்றது. வவுனியா நகரில் குறைந்த காவல்துறையினரே பாதுகாப்பு கடடையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வவுனியா நகருக்க செல்லவேண்டாம் என சிறீலங்காப் படையினரும் காவல்துறையினரும் வீதியில் பொதுமக்களைத் திருப்பி அனுப்புகின்றனர். ஒட்டுமொத்தமாக வவுனியா நகரே அமைதியாக வெறிச்சோடிக் காணப்படுகின்றது.
நெருடல் இணையம்
|