பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வன்னி தாக்குதல் - தலைமையக கட்டிடம் அழிப்பு – றாடர் நிலையம் செயலிழப்பு – புலிகளின் 115 எறிகணைகள் வீழ் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 09 September 2008

வவுனியாவில் உள்ள படைத் தலைமையகத்தில் சிறிலங்கா விமானப்படையினருக்காகக் கடமையாற்றிக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ராடர் இயக்குனர்களும் விடுதலைப்புலிகளின் வான் தாக்குதலில் காயமடைந்துள்ளார்கள்.  

காயமடைந்த இருவரும் உடனடியாகக் கொழும்புக்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறார்கள் எனவும் தெரிய வருகின்றது. படைத்தரப்புத் தகவல்களின்படி பத்துப் படையினரும் பொலிஸார் ஒருவரும் இச்சம்பவத்தில் பலியாகியுள்ளனர் என்றும் விடுதலைப்புலிகள் எனச் சந்தேகிக்கப்படுபவர்களின் பத்து சடலங்களைத் தாம் மீட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.  தவிரவும் 15 படையினரும் 8 பொலிஸாரும் 5 விமானப்படையினரும் காயமடைந்துள்ளதாகவும் படைத்தரப்புத் தெரிவித்துள்ளது.


இந்த தாக்குதலின் போது வன்னியில் இருந்து 115 எறிகணைகளை புலிகள் வீசியதாகவும் அவை அனைத்தும் ஜோசப் முகாம் பகுதியைச் சுற்றி வீழ்ந்ததாகவும் வவுனியாவின் எமது விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் முகாம் பகுதியில் அமைந்திருந்த முகாமின் தலைமைக் கட்டிடம், ராடர் நிலையம் என்பன முற்றாக சேதம் அடைந்ததுடன் இலங்கை விமானப்படையின் இரண்டு விமானங்களும் சேதம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  அதேவேளை கட்டுநாயக்காவிலிருந்து புறப்பட்ட இரண்டு தாக்குதல் விமானங்கள் வவுனியாவில் குண்டு வீசி விட்டுச் சென்ற புலிகளின்  இரண்டு விமானங்களைக் கண்டதாகவும் அவற்றில் ஒன்றை முல்லைத்தீவில் தரையிறங்கும் போது  சுட்டு வீழ்த்தியதாகவும் படைத்தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் அவ்வாறாக விமானம் ஏதும் வீழ்ந்ததாக அறியக்கிடைக்கவில்லை என வன்னித்தரப்புச் செய்திகள் தெரிவி;கின்றன. மறுபறத்தில் புதுக்குடியிருப்பில் மக்கள் செறிவாக வாழும்பகுதிகளிலும் பூநகரியிலும் சிறிலங்கா விமானப்படை விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதலை நடாத்தியுள்ளதாக அறியக் கிடைக்கிறது.  

இதேவேளை புலிகள் அதிகாலை 2.30 மணியளவில் வான் தாக்குதலை நடாத்தியதும்  மும் முனைகளிலிருந்து சிறிலங்காவின் படைத்தளத்தை நோக்கி ஆட்லறி செல் வீச்சு புலிகளால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. புலிகள் மேற்கொண்ட வான் தாக்குதலில் விமானப்படையின் இரண்டு விமானங்களும் ராடர் தொகுதியும்  சேதமுற்றதாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவித்துள்ளன.

 

   Tamilwin.com

 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..