ஓர் வெளிநாட்டவர்க்கு 18 வயதை அடைந்து, டென்மார்க்கில் கடைசி 9 வருடங்கள் வாழ்ந்திருந்து, குற்ற - வன்முறைகளில் ஈடுபடாதிருந்து, அரச நிறுவனகளுக்கு கடன் பாக்கி இல்லாதிருந்து, டெனிஸ் மொழியில் போதிய பாண்டித்தியம் இருந்தால் ஓர் ஆணோ அல்லது பெண் ணோ டெனிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம். வடவலைய நாட்டு மக்கள் 2 வருடமும், அகதி அந்தஸ்த்து பெற முழு உரிமையும் கொண்டிருந்த வெளிநாட்டவரும் - எந்த நாட்டு பிரசாவுரிமையில்லாதவர்கள் 8 வருடமும், மற்றைய விதிமுறைகளுக்கிணங்க அகதி அந்தஸ்து உடையவர்கள் 9 வருடமும் தொடர்ச்சியாக வாழ்ந்திருந்தால் டெனிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.
ஓர் டெனிஷ் நாட்டுப் பிரஜையை திருமணம் செய்தவர்களுக்கு வேறு விதிமுறைகள் அடங்கும். இந்தப் பக்கத்தில் விண்ணப்பிக்கும் பொழுது கவனிக்க வேண்டிய தகவல்கள், விதிமுறைகள், மற்றம் எந்த சந்தர்ப்பங்களில் ஒருவர் தனது டெனிஸ் குடியுரிமையை மீண்டும் இழக்க வேண்டி வரலாம் என்ற தகவல்களும் உண்டு. இந்தப் பக்கத்தில் கடைசி 6 மாதத்தினுள் டெனிஸ் குடியுரிமை பெற்றவர்களின் பெயர்ப் பட்டியல் காணப்படும். ஒருவர் டெனிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் பொழுது பிரத்தியோகமான விண்ணப்பத்தாளைப் பூர்த்தி செய்து அத்துடன் 1000 குறோன்கள் செலுத்த வேண்டும். ஒருவர் கொப்பனேகன் நசரசபையில் வசித்தால் அவர் தனது விண்ணப்பப் படிவத்தை பொலிஸ் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். டெனிஸ் குடியுரிமை பற்றிய சட்டம் 163. 27.04.2005 ஏற்றுக் கொள்ளப்பட்டது பாராளுமன்றத்தால் டெனிஸ் குடியுரிமை அளிக்க வேண்டும் என ஏற்றுக் கொள்ளப்பட்ட வெளிநாட்டவரின் பெயர்ப் பட்டியல். டெனிஸ் குடியுரிமைக்கு விண்ணப்பித்தல் டெனிஸ் குடியுரிமைக்கு யாருக்கு உரிமையுண்டு, யார் விண்ணப்பிக்கலாம் என்ற தகவல்கள். இது சம்மந்தமாக தொடர்பு கொள்ள வேண்டிய அரச அலுவலகங்களின் விலாசங்கள். விடயதானச் சொற்கள்: டெனிஷ் குடியுரிமை வெளியீட்டாளர்: danmark.dk (அரச தகவல் மையம்) எவ்வாறு டெனிஸ் குடியுரிமையைப் பெறுதல் டெனிஸ் குடியுரிமையை எவர் பெற முடியும் என்பது பற்றிய புதிய வரைமுறைகள். விண்ணப்பிப்பவர் என்ன என்ன தகமைகளைக் கொண்டிருக்க வேண்டும். இந்த ஒப்பந்தம் Venstre, Konservative Folkeparti, Dansk Folkeparti ஆகிய கட்சிகளுக்கிடையே ஏற்படுத்தப்பட்டது. விடயதானச் சொற்கள்: வெளிநாட்டவர், அரசியல், குடியுரிமை, பிரஜாவுரிமை வெளியீட்டாளர்: பாராளுமன்றம் 18 வயதிற்கும் 23வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்கள் 18 வயதிற்கும் 23வயதிற்கும் இடைப்பட்ட வெளிநாட்டு இளைஞர்கள் டெனிஸ் குடியுரிமை பெறுவதற்கு ஓர் உறுதிப்பதிவு செய்து கொள்ளும் சட்ட மாற்றம் 1999 மார்கழியில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. விடயதானச் சொற்கள்: டெனிஸ் குடியுரிமை, இளைஞர்கள் வெளியீட்டாளர்: danmark.dk (அரச தகவல் மையம்)
TamilNews
|