பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இராணுவப் படைத்தளபதிக்கும் இடையில் சந்திப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 10 September 2008

வெளிநாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதிநிதிகளுக்கும் இராணுவப் படைத் தளபதிக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்தியா, மியன்மார், பங்களாதேஸ், நேபாள் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகளே இவ்வாறு இராணுவத் தளபதியை சந்தித்துள்ளனர்.

குறித்த நாடுகளைச் சேர்ந்த முப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவில் நடைபெறும் விசேட பாதுகாப்பு பயிற்சி நெறியின் ஓர் அங்கமாக இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. 

குறித்த வெளிநாட்டு பாதுகாப்புப் பிரதிநிதிகள் ஐந்து நாட்கள் தங்கியிருந்து இலங்கையின் பாதுகாப்பு நிலவரம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து ஆராயவுள்ளனர்.

இலங்கை இராணுவப்படையினர் ஓர் தந்திரோபாய அணுமுறையைப் பின்பற்றி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுப்பதாகவும், விரைவில் முற்றாக விடுதலைப் புலிகளை இல்லாதொழிக்க முடியும் எனவும் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா வெளிநாட்டு பாதுகாப்பு பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..