|
வன்னியில் மக்கள் பட்டினி, நேபாளத்திற்கு சிறீலங்கா உதவி |
|
|
|
Wednesday, 10 September 2008 |
|
வன்னியில் மக்கள் பட்டினிச்சாவை எதிர்நோக்கியுள்ள நிலையில், நேபாளத்திற்கு 25 ஆயிரம் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவித் தொகையை சிறீலங்கா அரசாங்கம் வழங்கியுள்ளது.
நோபாளத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருகில் பாதிக்கப்பட்ட மக்ளுக்கான உதவித் தொகைக்குரிய காசோலையை காத்மண்டுவிலுள்ள சிறீலங்கா தூதுவர் ரணவீர, அந்த நாட்டின் தலைமை அமைச்சர் புஸ்பா கமல் தாலிடம் கையளித்துள்ளார்.
பருவப்பெயர்ச்சி காலநிலையால் 60 ஆயிரம் மக்கள் இடப்பெயர்வு அவலத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும், அவர்களுக்கே இந்த உதவி வழங்கப்பட்டிருப்பதாகவும் சிறீலங்கா அரசு கூறுகின்றது. வன்னியில் இடம்பெயர்ந்துள்ள இரண்டு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்களுக்குரிய உதவிகளைத் தடை செய்துள்ள சிறீலங்கா அரசாங்கம், அங்குள்ள மனிதநேய அமைப்புகளை வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நெருடல் இணையம்
|