|
சிறிலங்கா படையினருக்காக ராடர்களை இயக்கும் இந்தியாவின் "பாரத்" தொழில்நுட்பவியல் நிறுவனம் |
|
|
|
Thursday, 11 September 2008 |
|
இந்தியாவில் உள்ள "பாரத்" தொழில்நுட்பவியல் நிறுவனமே சிறிலங்கா படைத்தரப்புக்கான ராடர் கருவிகளை இயக்கும் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்களை வழங்கி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்திய மற்றும் சிறிலங்கா அரசாங்கங்கள் இணங்கிக்கொண்டதற்கு அமைவாக குறித்த இந்த நிறுவனம் பொறியியல் தொழில்நுட்பவியலாளர்களை வழங்கி வருகின்றது என்று கொழும்பில் உள்ள இந்திய துதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்துடன் செயற்பட்டு வரும் "பாரத்" தொழில்நுட்ப நிறுவனம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக சிறிலங்கா படைத்தரப்புக்கு தேவையான பொறியியல் தொழில்நுட்பவியலாளர்களை அவ்வப்போது அனுப்பி வருகின்றது.
திறனாய்வு செய்து ராடர்களை இயக்கக்கூடிய பொறியியல் தொழில்நுட்பவியலாளர்கள் 265 பேர் இதுவரை இந்த நிறுவனத்தினால் சிறிலங்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெருடல் இணையம்
|