பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

சரத்பொன்சேகாவின் புதிய கண்டுபிடிப்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 11 September 2008

அடுத்து வரப்போகும் காலங்கள் படையினருக்கு சவால் நிறைந்ததாக இருக்கும் என சிறிலங்கா இராணுவத் தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கடந்த காலங்களில் படையினருக்கு ஏற்பட்ட அழிவுகளைச் சவால் நிறைந்தது என்று சொல்லலாம். புதிய தாக்குதல்கள் சவால்கள் நிறைந்ததாக இருக்குமென கூறியிருப்பது ஏற்கனவே பட்ட இழப்பை உறுதி செய்வது போலவே இருக்கிறது.

முன்பு இழப்பில்லை எனச் சொல்லாமல்ச் சொல்லும் புதிய கண்டுபிடிப்பாகவே சரத் பொன்சேகாவின் கூற்று அமைந்திருக்கிறது. வன்னியின் பல பாகங்களிலும் முழுப்படைப்பலத்தையும் பிரயோகித்து பல போர் முனைகளைத் திறந்து விடுதலைப் புலிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்திய லெப்ஜெனரல் சரத்பொன்சேகா இப்போது அப்போர் முனைகளில் விடுதலைப் புலிகளின் பொறிக்குள் இராணுவம் வீழ்ந்து மடிவதைப் பார்த்து பொறுக்க முடியாமல் இனிவரும் காலங்கள் சவால் நிறைந்ததாக இருக்கும் என குறிப்பிடுகிறார்.

உண்மையில் சிறிலங்காவின் முப்படைகளும் தமிழ் மக்களைத் தான் தாக்கியிருக்கிறது. சர்வதேச போரியல் சட்டங்களை மீறி மக்கள் மீது கனரக ஆயுதங்களைக் கொண்டு சிறிலங்காப் படைகள் தாக்கியிருக்கிறது. மக்கள் வாழ்விடங்கள் மீது செறிவான ஆட்லெறி பீரங்கித் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.  இதனால் அவர்கள் தங்கள் பயிர்செய்த விவசாய நிலங்களையும் வாழ்ந்த வீடுகளையும் விட்டு ஏதிலிகளாக வெளியேறினர்.  இது அப்பட்டமான போர்க் குற்றமாகும்.  உண்மையில் இது தமிழ் மக்கள் மீது தொடுத்துள்ள போராகவே கருதப்படுகிறது.

விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்துவதாகத் கூறிக் கொண்டு அப்பாவிப் பொதுமக்களை இலக்கு வைக்கும் அரச படைகளின் போக்கே அவர்களை அழித்து விடும். விடுதலைப் புலிகளின் தந்திரோபாயம் போரிடும் ஆற்றல் என்பன குறித்து நன்கு விளங்கிக் கொண்ட சிறிலங்காப் படைகள் அதுபற்றிச் சற்றும் யோசியாமல் புலிகளின் பொறிக்குள் வீழ்ந்திருப்பது சற்று ஆச்சரியம் தரக்கூடியதே. ஆட்சியில் உள்ள அரசுத் தலைவர்கள் தமது இருப்பைத் தக்க வைத்துக் கொள்ள படையினரை பலியிட்டு வருகின்றார்கள் என்பதே யதார்த்த நிலையாகும்.

அப்பாவிப் படையினர் அவர்களின் உயிருக்கு இன்று உத்தரவாதம் இல்லாத நிலையே காணப்படுகிறது.  இந்த நிலவரங்களை சரத்பொன்சேகா மறைக்க முடியாத சூழ்நிலையில் புதிய கண்டுபிடிப்பாக ஒருசெய்தியைச் சொல்கிறார். வன்னியின் ஆழமான பகுதிகளை நோக்கி படையினர் நகர்த்துவதால் எதிர்வரும் காலங்களில் தமக்கு சவால் நிறைந்த ஒன்றாக இருக்கப் போகிறது, என சரத்பொன்சேகா எதிர்வு கூறுகிறார். வவுனியா படைத்தலமைப் பணிமனைக்கு விஜயம் செய்த இராணுவத் தளபதி தமது சகாக்களுக்கு இதனைக் கூறியுள்ளாரா? அல்லது தமது சகாக்கள் தற்போதைய எல்லைகளை விட்டு மேலும் முன்னேற முடியாது என்று கூறியதைக் கேட்டு இவ்வாறான கருத்தை முன்வைத்தாரோ தெரியவில்லைஅண்மைக் காலமாக வன்னிக் களமுனைகளில் படையினருக்கு பாரிய உயிரிழப்புக்கள் ஏற்பட்டு வருகின்றன என்பதும் மன்னார் பொது மருத்துவமனைக்கு நாளாந்தம் முற்பதிற்கும் மேற்பட்ட படையினர் காயப்பட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..