|
கிரானில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது கிளைமோர் தாக்குதல்: 4 பேர் பலி; 3 பேர் காயம் |
|
|
|
Thursday, 11 September 2008 |
|
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கிரான் பிரதேசத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கிளைமோர் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர். மூவர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
கிரான் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கூழாவடி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை முகாமிலிருந்து சுற்றுக்காவல் நடவடிக்கைக்காக சிறப்பு அதிரடிப்படையினர் சென்று கொண்டிருந்தனர்.
இவர்கள் மீது நேற்று புதன்கிழமை மாலை 5:30 நிமிடமளவில் கிளிபாய்ந்தகல் பாலம் அருகே விடுதலைப் புலிகள் கிளைமோர் தாக்குதல் நடத்தினர்.
இத்தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டனர். மூவர் காயமடைந்தனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|