|
கிழக்குப் பல்கலைக்கழகத்தை சிங்களப் பிரதேசத்திற்கு தரைவார்க்கும் நடவடிக்கைக்கு கிழக்குப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் திரு. பத்மநாதன் ஒப்புதல் அளித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.பந்மநாதன், விஞ்ஞானபீடாதிபதி திருமதி.தேவதாசன், வர்த்தக முகாமைத்துவ பீடாதிபதி அன்றூ ஆகிய மூவரும் தீடீரென கொழும்புக்குச் சென்றுள்ளனர்.
கொழும்பு சென்ற இவர்களுக்கும், சிறீலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் இரகசியப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. சந்திப்பின் போது கிழக்குப் பல்கலைக்கழகத்தின் வளாகம் ஒன்றை மொனராகலை மாவட்டத்தில் உள்ள புத்தல எனும் சிங்கப் பகுதியில் திறப்பதற்கு துணைவேந்த ஒப்புதல் அளித்துள்ளார்.
இச்சந்திப்பை நிறைவு செய்த இவர்கள், உள்ளுர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில், கிழக்குப் பல்கலைக்கழத்தில் சுமூகமான முறையில் கற்கை நெறிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும், பல்கலைக்கழத்தின் அபிவிருத்தி தொடர்பாகவும் பேசப்பட்டதாகத் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.
ஆனால், சந்திப்பில் கிழக்குப் பல்கலைக்கழத்தின் வளாகம் ஒன்றை மொனராகல மாவட்டதில் உள்ள புத்தலப் பிரதேசத்தில் அமைக்க வேண்டும் என சிறீலங்கா அரசாங்கம் கேட்டதற்கு, கிழக்குப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தர் பத்மநாதன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த முடிவு குறித்து, கிழக்குப் பல்கலைக்கழத்தின் மானிய ஆணைக் குழுவினரிடமோ அல்லது நிர்வாகத்தினரிடமோ அலோசனைகளையோ, அனுமதியோ, கேட்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்களத்தின் இந்த நடவடிக்கைக்குத் துணைவேந்தர் பத்தமநாதன் சோரம் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைவேந்தரின் இந்த முடிவு குறித்து, கிழக்குப் பல்கலைக்கழத்தின் விரிவுரையாளர்கள், மாணவர்கள் தெரிவிக்கையில், இன்று கிழக்குப் பல்கலைகழகத்தின் தலைமையகம் வந்தாறுமூலையில் இருக்கின்றது. நாளை புத்தலவில் திறக்கப்படும் வளாகத்திற்கு மாறக்கூடிய அபாயம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழத்திற்கு என ஒதுக்கப்படும் அபிவிருத்தி மற்றும் வளங்கள் இனிவரும் காலங்களின் சிங்கள மாணவர்கள் கல்விகற்கும் புத்தலப் பிரதேசத்திற்குப் செல்லப் போகின்றது. அத்துடன் இங்கு கல்வி கற்றும் ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி முடங்கிப் போகப் போகின்றது. அரசாங்கம் ஏதாவது ஒரு காரணத்தைக் காட்டி தமிழ் மாணவர்களை புத்தலவிற்கு வந்து கல்வியைத் தொடருமாறு சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. சிறீலங்கா அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு துணைவேந்தர் சோரம் போயுள்ளதையிட்டு விரிவுரையாளர்களும், மாணவர்களும் தமது கவலையை வெளிப்படுதியுள்ளனர்.
கிழக்குப் பல்கழக்கழகத் துணைவேந்தர் இந்த முடிவை தனிப்பட்ட முறையில் எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. சிறீலங்கா அரசாங்கத்திடம் பெருமளவான நிதியினை துணைவேந்தர் பெற்றிருக்கலாம் என பலரிடமும் கேள்வி எழுந்துள்ளது.
நெருடல் இணையம்
|