|
பிள்ளாயான் - கருணா முரண்பாடு தொடர்கிறது - விக்கினேஸ்வரனின் பதவிக்காலத்தை நீடிக்க அரசாங்கம் மறுப்பு |
|
|
|
Saturday, 13 September 2008 |
|
கிழக்கு மாகாண முதல்வர் சிவனேசதுரை சந்திரகாந்தன் எனப்படுகிற பிள்ளையான் தனது மூத்த ஆலோசகர் டொக்ரர் விக்கினேஸ்வரனின் பதவிக்காலத்தை நீடிக்குமாறு விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
கலாநிதி விக்னேஸ்வரன் முன்னர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் செயலாளராகப் பதவி வகித்தவர்.
கிழக்கிற்கான மாகாண சபை அமைக்கப்பட்டவுடன் முதல் மூன்று மாதங்களுக்கு அதன் செயலாராக நியமிக்கப்பட்டிருந்தார்.
தற்போது விக்னேஸ்வரன் கிழக்கு மாகாண முதலமைச்சரின் சார்பில் நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்க்pறார்.
கலாநிதி; விக்னேஸ்வரனுக்கு இந்தியாவுடன் உள்ள நெருங்கிய தொடர்பு காரணமாக அவருடைய பதவிக்காலம் நீடிக்கப்படக் கூடாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா எனப்படுகின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் கேட்டுக் கொண்ட போதும் முதலமைச்சரான சிவனேசபிள்ளை சந்திரகாந்தன் அவரின் பதிக்காலத்தை நீடிக்குமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.
கலாநிதி விக்னேஸ்வரன் வடக்குகிழக்கு மாகாண சபையின் முதல் முதலமைச்சாராக இருந்த வரதராஜப் பெருமாளின் செயலாளராக இருந்தவர்.
அக்காலத்தில் பெருமளவில் இந்தியாவின் ஆளுகைக்குட்பட்டிருந்தவராக அறியப்பட்டவர் என கருணா
தெரிவித்திருக்கிறார். அதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் சந்திர காந்தன் தனிப்பட்ட முறையில் அவரைத் தொடர்ந்தும் பணியில் வைத்திருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நெருடல் இணையம்
|