|
வன்னியில் இருந்து ஐநா பணியாளர்கள் இன்று வெளியேறுகிறார்கள் |
|
|
|
Tuesday, 16 September 2008 |
|
இலங்கையின் வடக்கே விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் ஐநா அமைப்புகள் உள்ளிட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என அரசாங்கம் பிறப்பித்த உத்தரவை அடுத்து, அப்பகுதியில் இயங்கிக்கொண்டிருக்கும் ஐ.நா. மன்ற அமைப்பின் பணியாளர்கள் ஏற்கெனெவே அங்கிருந்து வெளியேற ஆரம்பித்துள்ளனர்.
எஞ்சியுள்ள ஐநா அமைப்பின் பணியாளர்கள் அனைவரும் இன்று செவ்வாய்க்கிழமை அங்கிருந்து வெளியேற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களாக இவர்கள் அங்கிருந்து வெளியேறக் கூடாது எனக் கோரி, கிளிநொச்சியிலிருக்கும் பொது மக்கள் போராட்டங்கள் நடத்தியதோடு தடைகளை ஏற்படுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஐ.நா. மன்ற அதிகாரிகள் இது குறித்து விடுதலைப்புலிகள் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியதனைத் தொடர்ந்து, மீதமுள்ள ஐ.நா. அமைப்பின் பணியாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான வழியை ஏற்படுத்திக் கொடுப்பதாக விடுதலைப்புலிகள் தம்மிடம் உறுதி அளித்திருப்பதாக இலங்கையில் இருக்கும் ஐ.நா. மன்றத்தின் பேச்சாளர் கோர்டன் வெய்ஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இன்று முற்பகல் 10 மணியளவில் ஐநா பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகன அணி வவுனியாவை நோக்கி புறப்படவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெருடல் இணையம்
|