பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கருணாகுழு உறுப்பினர் வீராவின் கைவரிசை.!!! அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 20 September 2008

மட்டக்களப்பு- தேத்தாத்தீவு பிரதேசத்தில் (17-09-2008) அதிகாலை தன்னார்வ தொண்டு நிறுவன பணியாளர் ஒருவர் கருணாகுழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது-
சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனமான நியாப் நிறுவனத்தின் மட்டக்களப்பு அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் பிரேமலதா லோகேஸ்வரன்.
களுவாஞ்சிக் குடியிலுள்ள இவரது வீட்டுக்கு (17-09-2008) அதிகாலை கருணா குழு உறுப்பினர்கள் சிலர் சென்றுள்ளனர்.

கருணாவின் முக்கிய சகாவான இனியபாரதியின் மெய்ப்பாதுகாவலரான வீரா வின் தலைமையில் சென்ற கருணாகுழு உறுப்பினர்கள் கடத்தல் ஒன்றுக்காக பிரேமலதா புதிதாக வாங்கி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் இருந்த புதிய ரக மாருதி காரை கேட்டிருக்கின்றனர்.

அவர் மறுக்கவே இவர்கள் இருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் நடைபெற்றுள்ளது. அதனைத்தொடர்ந்து வீரா தனது இடுப்பிலிருந்த பிஸ்டலால் இவரைச் சுட்டுக்கொலை செய்துவிட்டு தமது சகாக்களுடன் தப்பிச் செற்றுள்ளார். படுகொலை செய்யப்பட்ட பிரேமலதா ஐந்து மாதக் குழந்தைக்கு தாயார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாலையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தேத்தாத்தீவு மக்களை அதிர்ச்சியிலாழ்த்தியுள்ளது.



நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..