|
ஐரோப்பிய ஒன்றிய மாநாட்டில் சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் குறித்த அறிக்கை வெளியீடு |
|
|
|
Saturday, 20 September 2008 |
|
தென் சுவீடனில் நடைபெற்று வரும் ஐரோப்பிய ஒன்றிய சமூகக் கூட்டமைப்பு - 2008 மாநாட்டில் சிறிலங்காவின் போர்க் குற்றங்கள் தொடர்பிலான அறிக்கையை பிரான்ஸ் தமிழர் மையம் வெளியிட்டது.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20 ஆயிரம் பேர் பங்கேற்கும் இம்மாநாடு கடந்த செப்ரெம்பர் 17 ஆம் நாள் தொடங்கியது.
இம்மாநாட்டில் நூற்றுக்கணக்கான கருத்தரங்குகள், கலைநிகழ்வுகள், கலந்துரையாடல்கள், செயற்பாட்டு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. எதிர்வரும் 21 ஆம் நாள் வரை இம்மாநாடு நடைபெற உள்ளது.
ஸ்காண்டிநேவிய நாடுகள் உள்ளிட்ட புலம்பெயர் வாழ் தமிழர் அமைப்பினரும் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.
இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதியில் தமிழ் மக்கள் மீது சிறிலங்கா அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்ட இனப்படுகொலை குறித்த புள்ளி விவர அறிக்கையை இம்மாநாட்டில் பிரான்ஸ் தமிழர் மையம், பங்கேற்பாளர்களுக்கு வழங்கியது.
நெருடல் இணையம்
|