பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

விடுதலைப் புலிகள் ஆயுதங்களை தரையிறக்கியுள்ளனர்: "சண்டே ரைம்ஸ்" அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Sunday, 21 September 2008

தமிழீழ விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி ஆயுதங்களை தருவித்துள்ளனர் என்று சிறிலங்காவின் தலைநகர் கொழும்பிலிருந்து வெளிவரும் "சண்டே ரைம்ஸ்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அந்த ஏட்டின் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:

வவுனியா படைத் தலைமையகம் மீது 09.09.08 விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக ஆராய்வதற்கு அரசு விசாரணைக்குழுவை நியமித்துள்ளது.

வவுனியா வான்படைத் தளத்தின் வான்படை கட்டளை அதிகாரி குறூப் கப்டன் றொமேஷ் பெர்னாண்டோ இக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இத்தாக்குதலின் போது படைத்தளத்தில் காணப்பட்ட பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பான ஆய்வுகளை இக்குழு மேற்கொள்ளவுள்ளது.

மேலும் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இந்திரா இரு பரிமான கதுவீ (ராடர்) சேதமடைந்ததுடன் அதனை ஒத்த மேலும் பல முக்கிய இலக்குகளும் குறிவைக்கப்பட்டிருந்தன.

எனினும் பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு அதனை வெளியிட முடியவில்லை.

இதனிடையே விடுதலைப் புலிகள் ஒரு தொகுதி ஆயுத தளபாடங்களை தருவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற போதும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.

நான்காவது ஈழப்போர் ஒரு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் தீவிர எதிர்ப்பை காட்டி வருகின்றனர். அவர்களின் வலிமையை குறைத்து மதிப்பிட முடியாது.

விடுதலைப் புலிகளின் 80 விகிதமான பலத்தை முறியடித்து விட்டதாக படைத்தரப்பு தெரிவித்து வருகின்ற போதும் அண்மைய வாரங்களில் விடுதலைப் புலிகளின் எதிர்த்தாக்குதல்கள் தீவிரம் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..