|
திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய பிரதம குருக்கள் சுட்டுக்கொலை |
|
|
|
Sunday, 21 September 2008 |
|
திருகோணமலை கோணேஸ்வரர் ஆலய பிரதம குருக்களான சிவஸ்ரீ சிவகுகராஜக் குருக்கள் இன்று மாலை 6 மணியளவில் இனந் தெரியாத ஆயுதக் குழுவினால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
திருகோணமலை ஸ்ரீ சண்முகானந்தா இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் உந்துருளியில் பயணித்துக் கொண்டிருந்தபோதே இவர்மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் சம்பவ இடத்திலேயே ஆலய குரு கொல்லப்பட்டதாகத் தெரிவித்த பொலிஸார் இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
நெருடல் இணையம்
|