|
எண்ணிக்கையற்ற விளையாட்டுக்களில் ஈடுபட்டு வரும் இலங்கை இராணுவத் தளபதி |
|
|
|
Sunday, 21 September 2008 |
|
இலங்கை இராணுவப்படைத் தளபதி சரத் பொன்சேகா யுத்தம் தொடர்பான தகவல்களை
வெளியிடும் போது முன்னுக்குப் பின் முரண்பட்ட தகவல்களை வெளியிட்டு வருவதாக
சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
162,000 துருப்பினர் அங்கம் வகிக்கும் இலங்கை இராணுவப் படையினர் இவ்வாறான
தகவல்களின் மூலம் பிழையாக வழிநடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ
விடுதலைப் புலிகள் கொல்லப்பட்ட எண்ணிக்கை, எஞ்சியிருக்கும் போராளிகளின்
தொகை என்பன தொடர்பில் ஓர் எண்ணிக்கை விளையாட்டு நடத்தப்பட்டு வருவதாக
அந்தப் பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாள் தோறும் ஊடகங்களுக்கு வழங்கும் செவ்விகளில் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியிடப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த
ஜூலை மாதம் 20ம் திகதி சண்டே ஒப்சர்வர் வார ஏட்டுக்கு அளித்த செவ்வியின்
போது 9000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாக சரத் பொன்சேகா
தெரிவித்திருந்தார்.
எனினும், கடந்த வாரம் வெளியிட்ட புதிய தகவல்களின்படி 11,000 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி
கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் 2000 விடுதலைப் புலிப் போராளிகள்
கொல்லப்பட்டிருக்க வேண்டும். எனினும், பாராளுமன்றத் தகவல்கள் மற்றும்
ஊடகங்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கைகளில்
மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளமை நோக்கத் தக்க விடயமாகும்.
கடந்த பெப்ரவரி மாதத்தில் இன்னும் 5000 விடுதலைப் புலி போராளிகள் எஞ்சியிருப்பதாக இராணுவத் தளபதி குறிப்பிட்டிருந்தார்.
நெருடல் இணையம்
|