|
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமையினால் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமெரிக்கா வீஸா மற |
|
|
|
Monday, 22 September 2008 |
|
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டமையினால் ஒட்டுக்குழு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமெரிக்கா வீஸா வழங்க மறுப்பு
பல்வேறு மனித உரிமை மீறல் சம்பவங்களுடன் தொடர்பு பட்டிருப்பதனால்இ ஈ.பி.டி.பி.யின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு அமெரிக்காவிற்குள் பிரவேசிப்பதற்கான வீஸாவை வழங்க முடியாதென அமெரிக்கா அறிவித்துள்ளது.
இலங்கையின் முன்னணி ஆங்கில செய்தித் தாள் ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.
நாளைய தினம் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவதற்காக விண்ணப்பித்த போது கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் இந்த மறுப்பை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பொதுசபை கூட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட முக்கிய பிரமுகர் குழாமில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக மேலதிக விடயங்களை அறிந்து கொள்வதற்காக அமைச்சரைத் தொடர்புகொள்ள முற்பட்ட போதிலும் அது பலனளிக்கவில்லை.
நெருடல் இணையம்
|