பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மக்களின் துன்பங்களை கூறிய வவுனியா அரச அதிபர் இடமாற்றம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 23 September 2008
வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்த மக்கள் படும் இன்னல்கள் தொடர்பில் கருத்து கூறியதற்காக வவுனியா மாவட்டத்துக்கான சிறிலங்கா அரசாங்க அதிபர் எஸ்.சண்முகம் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:

மன்னார் மாவட்டத்துக்கான சிறிலங்கா அரசாங்க அதிபர் நிக்கலஸ் பிள்ளைக்கு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபருக்கான பணியும் அரசினால் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

வவுனியா அரசாங்க அதிபர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டதுடன், நிக்கலஸ் பிள்ளைக்கு இந்த பணி வழங்கப்பட்டுள்ளது.

சண்முகத்தின் இடமாற்றத்திற்கான சரியாக காரணங்கள் எதுவும் அரசினால் கூறப்படாத போதும், அண்மையில் உயர் அரச அதிகாரிகளுடன் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் வவுனியா அரச அதிபர், இடம்பெயர்ந்து வாழும் மக்களின் நிலை தொடர்பாக தெரிவித்த கருத்தே அதற்கான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து சண்முகம் நீக்கப்பட்டதாக பொதுச் சேவைகள் அமைச்சு காரணம் தெரிவித்துள்ளது.

புதிய அரச அதிபர் வவுனியாவுக்கு நியமிக்கப்படும் வரையில் அந்தப் பணிகளை கவனிக்கும் படி நிக்கலஸ் பிள்ளையை பொதுச்சேவைகள் அமைச்சு பணித்துள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..