பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

தேர்தல் விஞ்ஞாபனமும் தேசிய இனப்பிரச்சினையும் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 20 October 2005

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தேர்தல் விஞ்ஞாபனம் மக்கள் முன் வைக்கப்பட்டுள்ளது. நீண்ட பிரசவ வேதனையின் பின் முன் வைக்கப்பட்டுள்ள இத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சியின் கீழேயே தீர்வு காணப்படும் என்றும் சுனாமி பொதுக் கட்டமைப்பு ரத்து செய்யப்படும் எனவும் போர் நிறுத்தம் மீளாய்வு செய்யப்படுவதுடன் பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே புலிகளுடன் பேச்சு நடத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை மக்களைப் பற்றி பிரதமர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. பெரும்பான்மை சிங்கள மக்களையும் கடும் போக்காளர்களையும், ஜே.வி.பி., ஹெல உறுமய போன்ற கட்சிகளையும் திருப்திப்படுத்த வேண்டிய அவசியம் அவருக்கு எழுந்துள்ளது. அதை பிரதிபலிக்கும் வகையிலேயே பிரதமரின் தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்துள்ளது என்று தமிழ் பேசும் மக்கள் கூறுகின்றனர்.

எவ்வாறெனினும் இந்த ஒற்றையாட்சி விவகாரத்தில் பல்வேறு சிக்கல்கள் தலை தூக்கியுள்ளதையும் மறுப்பதற்கில்லை. சுதந்திரக் கட்சிக்குள்ளேயே பல்வேறு கருத்து மோதல்கள் எழுந்துள்ளன. சுதந்திரக் கட்சியின் தலைவியான ஜனாதிபதி ஐக்கிய இலங்கைக்குள் தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்று கூறியுள்ளார்.

எங்கே சுதந்திரக் கட்சியின் தேசியக் கொள்கைகளை குறுகிய இன வாதக் கட்சிகள் உட்புகுந்து ஆக்கிரமித்து விடுமோ என்ற நியாயமான அச்சம் அவருக்கு எழுந்துள்ளது.

அதேவேளை, சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு முன் வைக்கப்பட்ட பொதுக் கட்டமைப்புக்கு சாவு மணி அடித்திருப்பது ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்காவினதும் வெளிவிவகார அமைச்சர் அநுரா பண்டாரநாயக்கவினதும் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைந்திருப்பதாக பலரும் சுட்டிக் காட்டுகின்றனர்.

பிரதமரின் கொள்கைகளை ஐ.தே.க. வும் வெகுவாக விமர்சித்துள்ளது.

ஐ.தே.க. பிரதிச் செயலாளர் திஸ்ஸ அத்த நாயக்கா, ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றுகையில்

பிரதமர் மஹிந்தவினால் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் பண்டார நாயக்காவின் கொள்கைகளுக்கு சாவு மணி அடிக்கப்பட்டுள்ளது. தான் ஜனாதிபதியாக வேண்டும் என்ற ஒரே காரணத்தினால் சுதந்திரக் கட்சியினை பிரதமர் , ஜே.வி.பி. யிடமும் , ஹெல உறுமயவிடமும் அடகு வைத்துள்ளார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினையை எவரும் தீர்த்து வைக்கப் போவதில்லை. வெறுமனே காலத்தைக் கடத்துவதிலும் பதவியை எட்டிப் பிடிப்பதிலுமே அரசியல் தலைமைத்துவங்கள் குறியாகவுள்ளன என தமிழ் பேசும் மக்கள் நன்குணர்ந்து வைத்துள்ளனர்.

காலத்துக்கு காலம் நடைபெறும் தேர்தல்களின்போது மாத்திரம் இனப்பிரச்சினை விவகாரத்தை ஆயுதமாகப் பயன்படுத்தி ஆட்சி பீடத்தைக் கைப்பற்றுவதில் பிரதான கட்சிகள் குறியாக இருக்கின்றனவே தவிர இனப்பிரச்சினையைத் தீர்க்கும் நோக்கம் அவர்களுக்கு எள்ளளவும் கிடையாது என்பதே யதார்த்தம் என தமிழ் பேசும் மக்கள் கூறுகின்றனர்.

தேர்தல் விஞ்ஞாபனங்களில் மாத்திரம் தேசிய இனப்பிரச்சினை பெரும்பங்களிப்பை வகிக்கின்றதே தவிர தேர்தல் முடிந்த கையோடு தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் அதே வேகத்தில் அடிபட்டுச் சென்று விடுவதையே அவதானிக்க முடிகின்றது.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அப்பால், நாட்டின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இதுவே பொன்னான சந்தர்ப்பம் என்பதை அரசியல் தலைமைத்துவங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மாறாக இனப்பிரச்சினை விவகாரத்தை தங்கள் சுய அரசியல் இலாபங்களுக்குப் பயன்படுத்த நினைப்பார்களேயானால் இறுதியில் இந்த நாடு பேரழிவையே சந்திப்பதாக இருக்கும் என்பதே யதார்த்தமாகும்.

இவை அøனத்துக்கும் அப்பால் போர் நிறுத்தம் காரணமாக சகல இன மக்களும் தற்பொழுதே நிம்மதி பெருமூச்சுவிட ஆரம்பித்துள்ளனர்.

அதனைக் கருத்தில் கொண்டு மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறிய கதையாகிவிடாமல் பார்த்துக்கொள்வதே நாட்டுக்கும் மக்களுக்கு செய்யும் உண்மையான சேவையாக இருக்கும் என்பதை சகல அரசியல் தலைமைத்துவங்களுக்கும் நினைவு படுத்தவிரும்புகின்றோம்


virakesari
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..