|
வடக்கில் இடம்பெயர்வுகளை தவிர வேறு அனுபவங்கள் அறியாது சிறுவர்கள் உள்ளனர் - யு.என்.எச்.சி.ஆர் |
|
|
|
Wednesday, 24 September 2008 |
|
தொடர்ச்சியாக இடம்பெயர்வதைத் தவிர வேறு அனுபவங்களை அறியாமல் வடபகுதியில் சிறுவர்கள் உள்ளதாக அகதிகளுக்கான ஐ.நா.வின் உயர்ஸ்தானிகராலயத்தின் அரசியல் பிராந்திய பணிப்பாளர் ஜங்ட் லிம் கவலை வெளியிட்டார்.
மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்தல் சிறிலங்காவில் நீண்டகால பிரச்சினையாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பதற்கு செயற்றிட்டமொன்றை உருவாக்குவதற்கான மூன்றுநாள் ஆலோசனைக் கூட்டம் நேற்று கொழும்பில் ஆரம்பமானது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய யு. என்.எச். சி. ஆரின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் லிம் மேலும் கூறியதாவது, யு.என்.எச்.சி.ஆரின் சிறிலங்காவுக்கான வதிவிடப் பிரதிநிதியாக 1998 - 2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் நான் பணியாற்றியுள்ளேன். எனவே, சிறி லங்கா நிலைவரம் தொடர்பாக எனக்கு நல்ல புரிந்துணர்வு உண்டு. அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே கடந்த 1987 இல் யு.என். எச். சி. ஆர். சிறிலங்காவுக்கு வந்தது. அன்று முதல் இங்கு மக்களின் இடம்பெயர்வு தொடர்ந்த வண்ணம் உள்ளது.
சிறிலங்காவின் வடபகுதியில் உள்ள சிறுவர்கள் தொடர்ச்சியாக இடம்பெயர்வதைத் தவிர வேறு அனுபவங்கள் இன்றிய நிலையில் உள்ளனர். இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைக்கு விரைவாக தீர்வு காணப்பட வேண்டும். அதற்கு தேசிய செயற்றிட்டமொன்றை உருவாக்குதல் சிறந்த நடவடிக்கையாகும்.
நெருடல் இணையம்
|