|
பாகிஸ்தானில் இருந்து பத்து நாட்களுக்கு ஒரு ஆயுதக்கப்பல் இலங்கைக்கு: கொழும்பு ஊடகம் |
|
|
|
Wednesday, 24 September 2008 |
|
எதிர்வரும் மாதங்களில் வன்னியில் மோதல்கள் தீவிரமடையவுள்ள நிலையில், இலங்கைப் படையினருக்கு பத்து நாட்களுக்கு ஒரு ஆயுதக்கப்பலை அனுப்ப பாகிஸ்தான் இணங்கியுள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் அதன் பாதுகாப்பு பத்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய பகுதிகள்:
எதிர்வரும் மாதங்களில் ஒவ்வொரு பத்து நாட்களுக்கும் ஒவ்வொரு ஆயுதக்கப்பலை அனுப்புவதற்கு பாகிஸ்தான் இணக்கம் தெரிவித்துள்ளது.
வன்னிப்பெரு நிலப்பரப்பில் மோதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் பாகிஸ்தான் இலங்கைக்கான ஆயுத உதவிகளை அதிகரித்துள்ளது.
இலங்கைப் படையினர் மிகவும் செறிவான சூட்டாதரவுடன் படை நடவடிக்கையை மேற்கொண்டு வருவதனால் அதிகளவான ஆயுதங்கள் தேவைப்படுகின்றன. அதனை ஈடுசெய்ய பாகிஸ்தான் முன்வந்துள்ளது.
இலங்கை இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பென்சேகாவுக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி அஷ்பக் பெர்வஷ் கஜானிக்கும் இடையில் நடைபெற்ற தனிப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்தே பாகிஸ்தான் இதற்கு இணைங்கியுள்ளது.
2000 ஆம் ஆண்டு இலங்கைப் படையினர் யாழ். குடாநாட்டில் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்தபோது பாகிஸ்தான் பல்குழல் உந்துகணை செலுத்திகள் மற்றும் ஆயுதங்களை இலங்கை அரசிற்கு வழங்கியிருந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|