பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

பாரிய தாக்குதலுக்கு தயாராகும் விடுதலைப் புலிகள்: பாதுகாப்பு நிலவர இணையத்தளம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 25 September 2008

கிளிநொச்சி நோக்கிய தாக்குதலுக்கு சிறிலங்கா படையினர் முயற்சித்து வருகையில் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதலுக்கு தம்மை தயார்படுத்தி வருகின்றனர் என்று சிறிலங்கா தொடர்பான பாதுகாப்பு நிலவரங்களை வெளியிடும் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கிளிநொச்சியை நோக்கிய தனது நகர்வை சிறிலங்கா படையினர் செறிவாக்கி வருகையில் விடுதலைப் புலிகள் பெரும் படை நடவடிக்கை ஒன்றிற்கு தம்மை தயார்படுத்தி வருகின்றனர்.

அக்கராயன் பகுதியில் விடுதலைப் புலிகளின் பல தாக்குதல் அணிகள் தளபதி லோறன்ஸ் தலைமையில் தயார்படுத்தப்படுகின்றன. இந்த அணிகளுக்கும் இராணுவத்தின் 57 ஆவது படையணிக்கும் இடையில் எந்த வேளையிலும் சமர் வெடிக்கலாம்.

விடுதலைப் புலிகளின் மிகச்சிறந்த தளபதிகளில் லோறன்ஸ் குறிப்பிடத்தக்கவர். கடந்த வருடம் விளாத்திக்குளம் பகுதியில் நடைபெற்ற வலிந்த தாக்குதலை அவரே தலைமை தாங்கி நடத்தியிருந்தார்.

இதனிடையே வான் படையினர் எரிபொருட்களைக்கொண்ட உந்துகணைகளை வன்னி மீதான தாக்குதலில் பயன்படுத்தி வருகின்றனர். இந்த குண்டுகள் குறிப்பிட்ட பரப்பளவில் உள்ள வாயுமண்டலத்தில் உள்ள ஒட்சிசனை அகற்றும் தன்மை கொண்டது.

மாங்குளம் நோக்கிய நகர்வில் ஈடுபட்டு வரும் படையினருடனான மோதல்களை கேணல் பானுவே வழிநடத்தி வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..