பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் - குழப்ப படைத்தரப்பு,பிள்ளையான்குழு முயற்சி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 25 September 2008

baticalo.jpgமட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழர் பிரதேசங்களில் புதன்கிழமை காலை முதல் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரையம்பதி இளைஞர்கள் இருவர் காணாமல்போனமை தொடர்பில் உரிய விசாரணைகள் ஆரம்பிக்கப்படாததை கண்டித்து ‘தமிழீழ விடுதலை அமைப்பு’என்ற அமைப்பு இந்த ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்த ஹர்த்தாலினை குழப்புவதற்கு பிள்ளையான்குழுவினர் பல்வேறு முயற்சிகளை படையினருடன் இணைந்து மேற்கொண்ட போதிலும் அவை வெற்றியளிக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு நகரில் அனைத்து வர்த்தன நிலையங்களும் பூட்டப்பட்டிருந்ததுடன் அரச தனியார் நிலையங்களின் செயற்பாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தன.

அத்தோடு நகரில் இருந்து உள்@ர் போக்குவரத்துகள் இடம்பெறாத அதேவேளை தூர இடங்களுக்கான போக்குவரத்துகள் ஓரளவு இடம்பெற்றென.

இந்த ஹர்த்தால் காரணமாக மட்டக்களப்பு – கல்முனை வீதி வெறிசோடி காணப்பட்டதுடன் மக்களின் நடமாட்டமும் வெகுவாக பாதிக்கப்பட்டிருந்தது.

ஆரையம்பதி உட்பட சில இடங்களில் ஹர்த்தாலினை குழப்புவதற்கு படையினரும் பிள்ளையான்குழுவினரும் எடுத்த முயற்சி வெற்றியளிக்காத போதும் சில இடங்களில் வலுக்கட்டாயமாக வர்த்தக நிலையங்களை திறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டம் செய்யமுயன்ற 5 இளைஞர்கள் கைது
இதேவேளை  செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி பிரதேசத்தில் பிள்ளையான்குழுவினருக்கும் பொலிஸாருக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்று இளைஞர் குழுவினர் முயற்சி மேற்கொண்டிருந்தபோது அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று ஆரையம்பதியில் இடம்பெற்றுவந்த ஹர்த்தாலினை தொடர்ந்து ஐந்து பேரைக்கொண்ட இந்த இளைஞர்குழு ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொள்ளும் நடடிவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோதே கைதுசெய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் ஐந்து பேரும் இன்று புதன்கிழமை காலை மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிபதி வீ.ராமகமலன் முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டபோது எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சிவில் நிர்வாகத்தை குழப்பி,கலகத்தை ஏற்படுத்த முயற்சித்தமை தொடர்பாக இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

எஸ்.சந்திரவதன்(18வயது,ஆரையம்பதி),எஸ்.திவாகர்(19வயது,குருக்கள்மடம்),த.புஸ்பநாந்த்(18வயது,ஆரையம்பதி),ச.விஸ்வநாத்(17வயது,ஆரையம்பதி),ரி.தனஞ்செயன்(21வயது,ஆரையம்பதி) ஆகியோரே கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..