|
பிள்ளையான் - கருணா முறுகல் |
|
|
|
Friday, 26 September 2008 |
|
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகி அமைக்கப்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பில் பிளவுகள் தோன்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
|
|
இதன் ஒரு கட்டமாக கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனுக்குப் பதிலாக கட்சியின் உப தலைவராக ஜெயம் என்பவர் நேற்று இரவு நியமிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.
|
பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள முறுகலின் உச்சகட்டமே இதுவென அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கட்சியின் பேச்சாளராகவும் பிள்ளையானின் இணைப்பதிகாரியாகவும் செயற்பட்டு வரும் அசாத் மௌலானாவின் இடத்திற்கும் வேறு ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையானின் செயலாளர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் உளவாளி என அண்மையில் கருணா குற்றச்சாட்டையும் முன்வைத்திருந்தார். இவர் தமது கட்சியில் நடப்பதை தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தெரியப்படுத்துவதற்காகவே பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் கருணா குற்றம் சுமத்தியிருந்தார்.
கருணா பிரித்தானியா சென்று மீண்டும் திரும்பி வந்து 6 மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் பிள்ளையானும் அவரும் நேரடியாக சந்தித்துக் கொள்ளவில்லை. இது அவர்களுக்கு இடையிலான முறுகல் தன்மையை வெளிப்படுத்துவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|