|
லண்டனில் ஜனாதிபதி மஹிந்த வழிபட்டுக்கொண்டு திரும்பிய விகாரை தாக்கப்பட்டது |
|
|
|
Friday, 26 September 2008 |
 நிவ்யோர்க் செல்வதற்கு முன் இங்கிலாந்து சென்ற ஜனாதிபதி மஹிந்த
ராஜபக்ச அங்கு சென்று வழிபட்டுக்கொண்ட கின்ஸ்பர் விகாரைக்கு நேற்று இரவு
இனந்தெரரியாத நபர்கள் சிலர் தாக்குதலை மேற்கொண்டு உள்ளனர்.
இத்தாக்குதலில் விகாரைக்கும் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் இரண்டிற்கும்
பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் எனவும் அவர்கள்
இரும்பு தடிகளினால் விகாரையின் ஜன்னல்களை தாக்கி பாய்ந்து செல்லும் போது மேல்
மாடியில் இருந்த பிக்குமார்கள் அவர்களை கண்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
நேற்று இரவு 1.35 மணியளவில் மேற்கொண்ட இத்தாக்குதலில் விகாரை உட்பட
வாகனங்களுக்கும் ஏற்பட்ட சேதம் பவுன் 25,000 ஆகும் எனவும் இது தொடர்பில் லன்டன்
மெட்ரோபொலிடன் பொலிசில் புகார் செய்யப்பட்டு அவர்கள் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு
வருவதாகவும் அங்கிருக்கும் இலங்கை ஊடகவியலாளர் தெரிவித்திருந்தார்.
நெருடல் இணையம்
|