பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

கருணா - பிள்ளையான் முரண்பாடுகள் ஆயுத மோதலை நோக்கிச் செல்வதை தடுக்க இரகசிய கூட்டம் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 27 September 2008

கருணா மற்றும் பிள்ளையான் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் ஆயுத மோதல் ஒன்றை நோக்கி செல்வதை தடுக்கும் வகையில் நாளையும் (28) நாளை மறுதினமும் (29) இரண்டு தரப்பினருக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவுள்ளன.

இரண்டு தரப்புக்கும் இடையில் நல்லெண்ணத்தைக் கட்டியெழுப்பும் வகையில் கொழும்பில் ரகசிய இடமொன்றில் நடத்தப்படவுள்ள இந்தப் பேச்சுவார்த்தையில் உயர்மட்டத் தரப்பும் தலையீடுகளை மேற்கொண்டுள்ளதாக நம்பத் தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை மோதலாக உருவெடுத்து கடந்த 25 ஆம் திகதி மட்டக்களப்பு நல்லையா வீதியில் உள்ள கருணா தரப்பினர் அடிக்கடி கூடும் ரி.எம்.வீ.பி. அலுவலகம் ஒன்றின் மீது கைக்குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தக் கைக்குண்டுத் தாக்குதலை பிள்ளையான் குழுவினர் மேற்கொண்டனர் என கருணா தரப்பினர் காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின் அதிகாரி ஒருவர் விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதே இந்த மோதல்கள் ஏற்படக் காரணம் என கருணா தரப்பினர் தெரிவித்துள்ளனர்.எனினும் இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது எனவும் இரண்டு தரப்புக்கும் இடையில் அவ்வாறான மோதல்கள் இடம்பெறவில்லை எனவும் கிழக்கு மாகாண முதலமைச்சரின் இணைப்புச் செயலாளரான அசாத் மௌலானா கூறியுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..