|
பிள்ளையான் 3 மில்லியன் ரூபா லஞ்சமாக பெற்றுக் கொண்டது அம்பலமாகியுள்ளது!!! |
|
|
|
Sunday, 28 September 2008 |
|
கிழக்கு மாகாண முதலமைச்சர் மூன்று மில்லியன் ரூபா பணத்தை லஞ்சமாக பெற்றுக் கொண்டுள்ளதாக ஆங்கில இணையதளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஹ ங்குரான மதுபான உற்பத்தி நிலைய அதிகாரிகளிடமிருந்து இந்தப் பணத்தை பிள்ளையான் பெற்றுக் கொண்டுள்ளார்.
பிள்ளையான் ஜப்பானுக்கு விஜயம் மேற்கொள்வதற்கு முன்னர் 700,000 ரூபா பணத்தை தனது நெருங்கிய நண்பர் ஒருவரின் மூலம் பெற்றுக் கொண்டுள்ளார்.
பின்னர் ஜப்பானிய விஜயம் முடிந்ததன் பின்னர் மேலும் 27,00,000 ரூபா பணத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக குறித்த ஆங்கில இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, அண்மையில் மட்டக்களப்பில் அரச சார்பற்ற நிறுவன பொறியலாளர் படுகொலை சம்பவத்துடன் பிள்ளையான் குழு உறுப்பினர்களுக்கு நேரடித் தொடர்பு இருப்பதாக சிவிலியன் வட்டாரத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
எனினும், குறித்த படுகொலையை விடுதலைப் புலிகளே மேற்கொண்டதாக அந்த பிள்ளையான் குழு குற்றம் சுமத்தியுள்ளதென குறித்த இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
நெருடல் இணையம்
|