|
காத்தான்குடி பள்ளிவாசல் முன்பாக கைக்குண்டுத் தாக்குதல்: 23 பேர் காயம் |
|
|
|
Monday, 29 September 2008 |
|
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடியில் உள்ள ஜெய்ன் மெத்தப் பள்ளிவாசல் முன்பாக அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் நான்கு சிறார்கள், பெண்ணொருவர் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளனர்.
காத்தான்குடி நகரில் உள்ள மட்டக்களப்பு - கல்முனை பிரதான வீதியில் அமைந்திருக்கும் ஜெய்ன் மெத்தப் பள்ளிவாசல் முன்பாக இன்று திங்கட்கிழமை பிற்பகல் 6:30 நிமிடமளவில் இக்கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்களே கைக்குண்டுகள் இரண்டினை வீசிவிட்டு தப்பியோடியுள்ளனர்.
இத்தாக்குதலில் நான்கு சிறார்கள், பெண்ணொருவர் உட்பட 23 பேர் காயமடைந்துள்ளனர். ஆறு பேர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இரண்டு உந்துருளிகளும் சேதமாகியுள்ளன.
காயமடைந்த அனைவரும் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கைக்குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான அனைவரும் முஸ்லிம்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
நெருடல் இணையம்
|