|
கருணா, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இரகசிய சந்திப்பு |
|
|
|
Monday, 29 September 2008 |
|
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் விநாயகமூர்த்தி முரளீதரனும் நேற்று செப் 28ல் சந்தித்து உள்ளனர்.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கருணா அணி - பிள்ளையான் அணி என்ற முரண்பாடு தீர்க்கப்படாத சூழலில் ஈபிடிபி க்கும் ரிஎம்விபி யின் கருணா அணிக்கும் இடையே இந்த சந்திப்பு இடம்பெற்று உள்ளது.
விடுதலைப் புலிகளில் இருந்து கருணா பிரிந்த காலகட்டங்களில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் கருணாவுக்கும் இடையே ஒரு நெருக்கம் இருந்தது.
ஆனால் அதன் பின்னர் கருணா ஈஎன்டிஎல்எப் உடன் உறவை ஏற்படுத்திக் கொண்டு இந்தியா சென்றது ஒரு பரகசியமான உண்மை. லண்டன் கிருஸ்ணன் தலையீட்டுடன் ஈஎன்டிஎல்எப் - கருணா வின் தேன்நிலவு கசக்க ஆரம்பிக்க கருணா இலங்கை புலனாய்வுத் துறையின் உதவியுடன் இலங்கை சென்று, அதன் பின் இலங்கை புலனாய்வுத்துறையின் பிரித்தாளும் தந்திரத்தில் கருணா - பிள்ளையான் அணிகள் பிளவுண்டதும்
அதன் பின் கருணா பிரித்தானியா வந்து மாட்டிக் கொண்டதும் கருணா திரும்பி வரகையில் பிள்ளையான் முதலமைச்சர் ஆனாதும் அதன் தொடர்ச்சியும் நாம் ஊடகங்களில் பார்த்துக் கொண்டு உள்ளோம்.
கருணா - டக்ளஸ் சந்திப்பு மீண்டும் பழைய உறவைப் புதுப்பித்து புதிய கூட்டை உருவாக்குமா என்பது அரசியல் சதுரங்கம். கொழும்பில் மழைபெய்தால் ஐரோப்பாவில் குடை பிடிக்கும் கோஸ்டிகள் பல இன்று எம்மத்தியில் உலா வருகின்றன. அதனால் இதன் தாக்கம் புலம்பெயர் தளத்திலும் எதிரொலிக்கும்....
நெருடல் இணையம்
|