|
ஐ. நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனை சந்தித்தார்-மஹிந்த |
|
|
|
Tuesday, 30 September 2008 |
|
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 63ஆவது கூட்டத் தொடரில் பங்குபற்றுவதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருந்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ. நா. சபையின் செயலாளர் நாயகம் பான்கீ மூனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி நியூயோர்க்கிலுள்ள ஐ. நா. தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற இச்ச்சந்திப்பின்போது இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளை ஒழிப்பதற்காக அரசாங்கம் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான இலங்கையின் தெளிவான நிலைப்பாடு என்பன குறித்து ஐ. நா. செயலாளருக்கு மகிந்த விளக்கிக் கூறினார்.
விடுதலைப் புலிகள் ஆயுதங்களைக் கீழே வைக்கும்வரை அவர்களுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் கிடையாது என திட்டவட்டமாகத் மகிந்த தெரிவித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன
நெருடல் இணையம்
|