|
சூரிச்சில் தமிழர்களுக்கு இடையே மோதல் |
|
|
|
Tuesday, 30 September 2008 |
|
சூரிச்சில் தமிழர்களுக்கு இடையில் நேற்றைய தினம் கடும் மோதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப் படுகிறது. பத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் சிறு கத்திகள் மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டு மோதலில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மோதல் சம்பவத்தின் போது ஒருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெருமளவிலான இளைஞர்கள் மோதல்களில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.என்ன காரணத்திற்காக மோதல்கள் இடம்பெற்றதென்பது இதுவரையில் தெரியவரவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது
நெருடல் இணையம்
|