பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow கந்தளாயில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது தாக்குதல்: நால்வர் பலி
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

கந்தளாயில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது தாக்குதல்: நால்வர் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Tuesday, 30 September 2008

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கந்தளாய் பகுதியில் சிறிலங்கா படையினரின் காவலரண் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய திடீர் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:

கந்தளாய் பிரதேசத்துக்குட்பட்ட சேரநாவ பகுதியில் சிறிலங்கா படையினரும் ஊர்காவல் படையினரும் சேர்ந்து அமைத்திருந்த காவலரண் மீது நேற்று திங்கட்கிழமை (29.09.08) முற்பகல் 9:00 மணியளவில் விடுதலைப் புலிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இத்தாக்குதலில் காவலரண் முற்றாக தாக்கியழிக்கப்பட்டது. இதில் படைத்தரப்பைச் சேர்ந்த நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.

படையினரிடமிருந்து ரி-56 ரக துப்பாக்கி - 01, அதற்குரிய ரவைகள் - 30, சொட்கண் - 01 ஆகியன விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்காவலரணானது அதியுயர் பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..