|
கிளிநொச்சி கனகாம்பிகைக்குள மக்கள் குடியிருப்பு மீது வான்குண்டு வீச்சு: இருவர் பலி! 13 பேர் காயம் |
|
|
|
Wednesday, 01 October 2008 |
|
கிளிநொச்சியில் சிறீலங்கா வான்படையினர் நடத்திய குண்டு வீச்சில் அப்பாவிப் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 13 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர்.
இன்று புதன்கிழமை முற்பகல் 13.30 மணியளவில் வன்னி வான்பரப்பினுள் நுழைந்த சிறீலங்கா வான்படைக்குச் சொந்தமான இரு கிபிர் யுத்த வானூர்திகள் கனகாம்பிகைக்குள வீதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளை இலக்கு வைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன. இதன்போதே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.
குண்டு வீச்சின் போது இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் இரு சிறுவர்கள் உட்பட 13 பேர் காயமடைந்துள்ளனர். நான்கு வீடுகள் முற்றாக அழிவுற்றுள்ளன. 16 வீடுகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன.
கொல்லப்பட்ட இரு பொதுமக்களின் உடலங்களும் சிதைந்து காணப்படுவதால் உடலங்கள் இனங்காணப்படவில்லை.
வான்வழித் தாக்குதலில் காயமடைந்தவர்கள்
01. இராமையா விஜயதர்சினி (வயது 16)
02. பரந்தாமன் கௌரி (வயது 03)
03. செல்லையா யோகராணி (வயது 68)
04. செபமாலை இந்திராணி (வயது 28)
05. அருட்சோதி ஆரோக்கியம் (வயது 49)
06. காந்தரூபன் சிவாஜினி (வயது 28)
07. தர்மன் கோகுலவாசன் (வயது 04)
08. கந்தசாமி சத்தியஞானதேவி (வயது 57)
09. வர்ணகுலசிங்கம் இராஜேந்திரம் (வயது 45)
10. செல்லையா சுப்பிரமணியம் (வயது 53)
11. செல்வநாயகம் பெருமாள் (வயது 65)
12. விக்கினேஸ்வரன் கமலாதேவி (வயது 26)
13. வேலு லட்சுமிப்பிள்ளை (வயது 68)
நெருடல் இணையம்
|