பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow ஐ.நா. அமைப்பின் லொறியில் வெடிபொருட்கள் காணப்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை - பேச்சாளர் கோர்டன் வை
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

ஐ.நா. அமைப்பின் லொறியில் வெடிபொருட்கள் காணப்பட்டதாக கூறப்படுவதில் உண்மையில்லை - பேச்சாளர் கோர்டன் வை அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 01 October 2008

  வன்னிக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதற்காக ஐக்கிய நாடுகள் அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட உணவு லொறியில் வெடிபொருட்கள் காணப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மைக்கு புறம்பானது என்று அந்த அமைப்பின் பேச்சாளர் கோர்டன் வைஸ் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு படையினரால் கைப்பற்றப்பட்ட சீ4 வெடிபொருட்கள் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உணவு லொறிகளிலேயே கண்டு பிடிக்கப்பட்டதாகவும், சில ஊடகங்களில் குறித்த தகவல் திரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வன்னியில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களை அனுப்பி வைப்பதற்காக அரசாங்கத்துடன் இணைந்து ஐக்கிய நாடுகள் அமைப்பு நடவடிக்கை மேற்கொண்டிருந்தது. வன்னிக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் லொறிகளைச் சோதனையிட்ட போது ஒரு லொறியில் சீ4 வெடிபொருட்கள் மற்றும் மின்கலங்கள் காணப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனினும், குறித்த பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட உணவு லொறி அரசாங்க அதிபரினால் அனுப்பி வைக்கப்பட்டதொன்றென ஐக்கிய நாடுகள் அமைப்பின் பேச்சாளர் கோர்டன் வைஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..