|
ஐ.நாவின் உணவு வாகன அணியில் 51 லொறிகள் இன்று வன்னிக்கு.... முல்லை.இ கிளிநொச்சிக்கு ஒரு கிழமைக்குரிய ப |
|
|
|
Thursday, 02 October 2008 |
|
கிளிநொச்சிஇ முல்லைத்தீவு மாவட்டங்களுக்குரிய உணவுப் பொருள்களுடன் உலக உணவுத்திட்டத்தின் ஐம்பத்தொரு லொறிகள் ஐக்கிய நாடுகள் சபையின் கொடியுடன் இன்று வியாழக்கிழமை காலை 9 மணிக்கு ஓமந்தைச் சோதனை நிலையம் ஊடாக வன்னிக்குப் புறப்படுகின்றன.
கிளிநொச்சி அரச அதிபர் நா.வேதநாயகன் நேற்றிரவு இத்தகவலை எமக்கு தெரிவித்தார்.
அரிசிஇ சீனிஇ கோதுமைமாஇ பருப்புஇ சமையல் எண்ணெய் ஆகியன இந்த வாகன அணியில் எடுத்துச் செல்லப்படுகின்றன.
வாகன அணியில் எடுத்துச் செல்லப்படும் பொருள்கள்இ இரு மாவட்டங்ளிலும் இடம்பெயர்ந்து நலன்புரி நிலை யங்களில் தங்கியிருப்பவர்களுக்கு நேரடியாக அந்ததந்த மாவட்ட அரச அதிபர்களின் மேற்பார்வையில் வழங்கப்படும்.
ஒரு வாரத்துக்குப் போதுமான பொருள்களே எடுத்துச் செல்லப்படுகின்றன.
ஒவ்வொருவாரத்துக்கும்தேவையான அத்தியாவசிய உணவுப் பொருள்கள் இதே வழியில் வாகன அணியுடன் எடுத்துச்செல்ல ஏற்பாடாகியுள்ளது என்றும் அரச அதிபர் கூறினார்.
வவுனியாவில் தங்கியுள்ள அரச அதிபர் வாகன அணியுடன் கிளிநொச்சிக்கு செல்கிறார்.
வாகன அணியுடன் செல்லும் உலக உணவுத்திட்ட அதிகாரிகள் பொருள்களை அகதிகளுக்கு வழங்கிய பின்னர் நாளை வவுனியா திரும்புவார்கள் என்ற அறியப்படுகிறது.
நெருடல் இணையம்
|