|
வன்னிவிளாங்குளத்தில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு: 5 பேர் பலி; 10 பேர் காயம் |
|
|
|
Saturday, 04 October 2008 |
|
வன்னிவிளாங்குளத்தில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 5 படையினர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வன்னிவிளாங்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 4:30 நிமிடத்துக்கு செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்கா படையினர் முன்னகர்வுத் தாக்குதலை நடத்தினர்.
இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் தீவிர தாக்குதலை நேற்று மாலை 6:30 மணிவரை நடத்தி படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர்.
இதில் 5 படையினர் கொல்லப்பட்டனர். 10 பேர் காயமடைந்தனர். படைத்தரப்பைச் சேர்ந்தவரின் உடலம் உட்பட படையப் பொருட்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
நெருடல் இணையம்
|