பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

வாராந்த அமைச்சரவை கூட்டத்தில் பிள்ளையான் பங்கேற்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 04 October 2008

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக்கூட்டத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சரும் பிள்ளையான்குழுவின் தலைவருமான  பிள்ளையான் பங்குபற்றியுள்ளார்.

 

வாராந்த அமைச்சரவைக்கூட்டம் அலரிமாளிகையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நடைபெற்றது.

அமைச்சரவைக்கூட்டத்தில் மாகாண அபிவிருத்தி தொடர்பாக கலந்துரையாடப்படுகின்ற போதும் மாகாண முதலமைச்சர்களின் பங்கேற்பும் அவசியமானது என்று ஜனாதிபதி வழங்கிய தீர்மானத்திற்கு அமைவாகவே கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான் இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

வாரந்த அமைச்சரவைக்கூட்டத்தில் ஏனைய மாகாண சபைகளின் முதலமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். எனினும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த முதலமைச்சர் ஒருவர் அமைச்சரவைக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளமை இதுவே முதற்தடவையாகும்.

மாகாண சபைத்தேர்தல் முறையை மறுசீரமைத்தல் தொடர்பில் அமைச்சரவைக்கூட்டத்தில் ஆராயப்படவிருந்த போதிலும் அது தொடர்பில் கலந்துரையாடலை இரண்டு வாரத்திற்கு பின்னர் மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக்க பண்டார தென்னக்கோனால் கொண்டுவரப்பட்ட மாகாண சபைத்தேர்தல் முறைமையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கான யோசனைக்கு மேலும் சில யோசனைகள் கிடைத்துள்ளமையினாலேயே இது தொடர்பில் இரண்டு வாரத்திற்கு பின்னர் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..