பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

3ம் இணைப்பு சிறிலங்கா தரைப்படையின் முன்னாள் தளபதி ஜானக பெரெரா உட்பட 25 பேர் குண்டுத்தாக்குதலில் பலி அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Monday, 06 October 2008

20696சிறிலங்காவின் வட மத்திய மாகாணத்தில் உள்ள அனுராதபுரத்தில் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா தரைப்படையின் முதன்மைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜானக பெரெரா உட்பட 25 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 80 பேர் காயமடைந்துள்ளனர்.

கடைந்தெடுத்த தீவிர இனவாதி இவர் ராணுவத்தில் இருந்து தமிழர்களை அழித்தது காணாது என்று அரசியலுக்கும் வந்தார் ஆனால் அது நிறைவேறுவதற்கு முதலே முடிவு வந்துவிட்டது.இவரது பாதுகாப்பு சம்பந்தமாக அரசு முரண்பட்ட நிலையில் தனக்கு ஏதாவது நேர்ந்தால் அரசே முழுப்பொறுப்பும் ஏற்கவேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்லப்பட்டவர்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் சிரச ஊடகத்தின் அனுராதபுர செய்தியாளர் மொகமட் நஸ்மியும் அடங்குவர் என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த அனைவரும் அனுராதபுர மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருப்பவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ஒரு தற்கொலைத் தாக்குதல் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரப்போரில் முதன்மைப் பங்கை வழங்கிய அதேவேளை பெருமளவில் தமிழின அழிப்புக்கும் காரணமாக இருந்தவர் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா.

யாழ். செம்மணி படுகொலைகளின் சூத்திரதாரியாகவும் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

20081006_sp04


theivam
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..