|
பிரித்தானியாவில் கைவிடப்பட்ட நிலையில் இலங்கைச் சிறுவர்கள் |
|
|
|
Tuesday, 07 October 2008 |
|
பிரித்தானியாவில் பெரும் எண்ணிக்கையிலான இலங்கை சிறுவர் சிறுமியர் கைவிடப்பட்ட நிலையில் நிர்க்கதியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த வருடத்தில் மட்டும் சுமார் 65 சிறுவர்கள் பிரித்தானிய துறைமுகம் மற்றும் விமான நிலையங்களில் கைவிடப்பட்ட நிலையில் குடிவரவுப் பிரவினரால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர்.
17 வயதுக்கு குறைந்த இவ்வாறான குழந்தைகளுக்கு பிரித்தானிய சட்ட விதிகளின்படி தஞ்சம் அளிக்கப்பட வேண்டும்.
வருடாந்தம் பெரும் எண்ணிக்கையிலான சிறுவர்கள் இவ்வாறு பிரித்தானியாவில் தஞ்சம் கோருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 3525 சிறுவர் சிறுமியர் கைவிடப்பட்ட நிலையில் தஞ்சம் கோரியுள்ளனர்.
பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்களினால் கைவிடப்பட்டு நிர்க்கதியாக்கப்பட்ட 65 இலங்கைக் குழந்தைகளுக்கு கடந்த வருடம் தஞ்மளிக்கப்பட்டுள்ளது.
மூன்று வயது முதல் 17 வயது வரையில் பல்வேறு வயது மட்டங்களைச் சேர்ந்த சிறுவர் சிறுமியர் இதில் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெருடல் இணையம்
|