பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow இடம்பெயர்ந்த மக்களை நேரில் சென்று சந்தித்தார் தேசியத் தலைவர்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

இடம்பெயர்ந்த மக்களை நேரில் சென்று சந்தித்தார் தேசியத் தலைவர் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 08 October 2008

சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் இடம்பெயர்ந்து அவலப்படும் மக்களை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் நேரில் சந்தித்து அவர்களுக்கான உதவிகளை வழங்கும் பணிப்புரை வழங்கினார்.

சிறிலங்கா படையினரின் தாக்குதல்களால் பெருமளவில் மக்கள் இடம்பெயர்ந்து அவலப்படும் சூழ்நிலை காணப்படுகின்றது.

அந்த மக்களின் அவலங்களை தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு அவர்களுக்குரிய உதவிகளை வழங்குமாறு போராளிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

மேலும் அவலப்படும் மக்களுக்கு தமிழீழ அரசியல்துறை மற்றும் தமிழீழக் கட்டமைப்புக்கள் உதவி செய்யும் நடவடிக்கைகளை துரிதமாக்கியுள்ளன.

இருப்பிடங்களை அமைப்பது இதற்கான இடங்களை தெரிவு செய்து வழங்குவது என பல்வேறு பணிகள் துரிதமாக தமிழீழக் கட்டமைப்புக்களால் வழங்கப்படுகின்றன.

மக்களின் நலப்பணிகள் மற்றும் ஊட்ட உணவளித்தல் பணிகளும் துரிதமாக மேற்கொள்ளப்படுகின்றன.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..