பிரதான பக்கம் arrow இலங்கைச் செய்திகள் arrow (3ம் இணைப்பு) மும்முனை முறியடிப்பு : படையினர் 62 பேர் பலி, 72 பேர் காயம், 3 உடலங்கள், ஆயுதங்கள் மீட்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English

(3ம் இணைப்பு) மும்முனை முறியடிப்பு : படையினர் 62 பேர் பலி, 72 பேர் காயம், 3 உடலங்கள், ஆயுதங்கள் மீட் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Wednesday, 08 October 2008

 சிறீலங்கா படையினர் வன்னியின் மும்முனைகளில் மேற்கொண்ட முன்னகர்வு ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதில், படைகள் தரப்பில் 62 பேர் கொல்லப்பட்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலை 5:30 முதல் மிகச்செறிவான சூட்டாதரவுடன் படையினர் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டிருந்த போதிலும், மும்முனையிலும் முன்னகர்வு முறியடிக்கப்பட்டுள்ளது.

 


அக்கராயன் – முறிகண்டி பகுதியில் விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலில் படையினர் 26 பேரும், வன்னிவிழாங்குளத்தில் 16 படையினரும், வன்னேரிக்குளத்தில் படையினர் 20 பேரும் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் தாக்குதல்களில் அக்கராயனில் 49 படையினரும், வன்னிவிழாங்குளத்தில் 23 படையினருமான மொத்தம் 72 சிறீலங்கா படையினர் காயமடைந்துள்ளதாகவும், விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

நேற்றைய மோதலில் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் பற்றி விபரங்கள் எதுவும் விடுதலைப் புலிகளால் வெளியிடப்படவில்லை.

இதேவேளை, வவுனியா, மன்னார் மருத்துவமனைகளில் படையினருக்கென ஒதுக்கப்பட்டுள்ள பகுதிகளில் நாளாந்தம் பெருமளவிலான காயமடைந்த படையினர் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.


 


 


 


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2008 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..