|
சுவாரசியமான துப்பறியும் விளையாட்டு இது. |
|
|
|
Thursday, 20 October 2005 |
|
IP முகவரியும், கணினி இருக்கும் இடமும்.. கொஞ்சம் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் நமக்கு வரும் இ-மெயில்கள் எங்கிருந்து வருகிறது என்று நம்மால் தெரிந்துகொள்ள முடியும். உங்களுக்கு இ-மெயில் அனுப்பியவரின் IP முகவரியைக் கண்டுபிடிப்பது எளிது... உதாரணமாக யாகூ மெயிலை எடுத்துக்கொள்வோம்.. முதலில் உங்களுக்கு வந்த மெயிலை திறங்கள்.. பின்னர் அந்த மெயிலில் வலது மூலையில் உள்ள full headers என்பதைச் சுட்டவும். சுட்டியவுடன் உங்களுக்கு வந்த மின் மடல் பற்றிய விரிவான தகவலைக் காட்டும்.. அதில் உங்களுக்கு மடல் அனுப்பியவரின் IP முகவரி இருக்கும். அவ்வளவுதான் நீங்கள் IP முகவரியைக்கண்டுபிடித்துவிட்டீர்கள்.. அவரின் IP முகவரியை வைத்து இடத்தைக் கண்டுபிடித்துவிடலாம் http://www.geobytes.com/IpLocator.htm , இத்தளத்துக்குச் சென்று ஒரு IP முகவரியைக் கொடுத்தீர்களானால்.. அந்த IP இலக்கம் எந்த நாட்டுக்கு சொந்தமானது என்று சொல்லிவிடும். . இன்னும் இத்தகவலைப் பல வழிகளில் பயன்படுத்தலாம்.. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.. சுவாரசியமான துப்பறியும் விளையாட்டு இது.
நெருடல் இணையம்
|