பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

இராமேஸ்வரம் மீனவர்கள் மீது மீண்டும் இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Thursday, 09 October 2008

தமிழகத்தின் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது மீண்டுமொருமுறை இலங்கை கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பாக்கு நீரிணையில் வைத்து சுமார் 60 மீனவர்கள் மீது கடற்படையினர் தாக்குதல் மேற்கொண்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
 
15 வர்த்தக மீன்பிடி வள்ளங்களில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
 
இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், தமிழக மீனவர்கள் இரும்புக் கம்பிகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களினால் பதில் தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 
மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்திய பெறுமதி வாய்ந்த பொருட்களை இலங்கைக் கடற்படையினர் சேதப்படுத்தியுள்ளனர்.
 
குறிப்பாக ஜீ.பி.எஸ். உபகரணம், மீன்பிடி வலைகள் உள்ளிட்ட 15 லட்ச ரூபா பெறுமதியான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியப் பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
 
இந்தத் தாக்குதலில் காயமடைந்த மீனவர் ஒருவர் இராமேஸ்வரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..