பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

இலங்கையில் போர் விமானங்களை செலுத்தும் இந்திய வானோடிகள் அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 11 October 2008

அண்மையில் உக்ரேன் நாட்டிலிருந்து கொள்வனவு செய்த சிறிலங்கா விமானப்படையின் நவீன குண்டு வீச்சு விமானங்களை  இந்திய விமானப் படையினரின் விமானிகளே ஓட்டி வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

அண்மைக்காலங்களாக சிறிலங்கா விமானப்படையானது தமிழப் பகுதிகள் மீதான விமானத் தாக்குதல்களுக்கு,  நவீன குண்டுவீச்சு விமானங்களைப்  பயன்படுத்தி வருகிறது.

இத்தாக்குதல்களில் தினந்தோறும் பல தமிழ் மக்கள் கொல்லப்பட்டு வருவதும், அவர்களின் வாழ்வாதாரங்கள் அனைத்துமே  இல்லாதொழிக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா விமானப்படையினரின் குண்டு வீச்சு விமானங்களை இந்திய விமானப்படையினரின் விமானிகளே ஓட்டி வருவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உக்ரேன் நாட்டிலிருந்து சிறிலங்காவானது அண்மையில் கொள்வனவு செய்த ‘MIG27, MIG29′ போன்ற நவீன தொழில்நுட்ப குண்டுவீச்சு விமானங்களை செலுத்தக்கூடிய விமானிகள் சிறிலங்காவிடம் இல்லை என்பதும், குறுகிய காலத்தில் அவற்றை செலுத்துவதற்கு ஏற்ற பயிற்சிகள் பெறுவதென்பது சாத்தியப்படாத ஒன்றாகும்.

இந்நிலையில் சிறிலங்கா விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ள இக்குண்டுவீச்சு விமானங்களைச் செலுத்துவதற்கு விமானிகள் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்களையும் இந்திய அரசு சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளது. இந்திய விமானப்படையில் ரஷ்ய தயாரிப்புகளான ‘MIG27, MIG29′ குண்டுவீச்சு விமானங்களே அதிக அளவில் பயன்பாட்டிலுள்ளது.

அண்மைக்காலங்களாக சிறிலங்கா அரசால் கொள்வனவு செய்யப்படும் ஆயுத தளபாடங்கள் அனைத்தும் இந்திய படைத்துறை வல்லுனர்களின் ஆலோசனைகளின் பேரில்தான் கொள்வனவு செய்யய்யடுகிறது.

அண்மையில் வவுனியாவில் தாக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் வன்னி கூட்டுப்படைத்தள தலைமயகத்தில் சில இந்தியப் படையினர் காயமடைந்து கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் இந்தியப் படைகள் தமிழர் தாயகத்தில் நிலை கொண்டிருப்பது தொடர்பான தகவல்கள் வெளியாகியிருந்தமை தெரிந்ததே.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..