|
பிள்ளையான் மீது மறைமுகமாக ஆப்பு வைக்கும் டக்ளஸ் |
|
|
|
Saturday, 11 October 2008 |
|
கிழக்கு மாகாண முதலமைச்சர் மீது அரசாங்கம் அதிக அழுத்தங்களைப் பிரயோகித்து வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
திட்டமிட்ட வகையில் பிள்ளையானுக்கு எதிரான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அரசாங்க ஊடகங்களில் பிள்ளையானுக்கு எதிரான செய்திகள் வெளியிடுவதாகவும், வழங்கப்பட்டிருந்த சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
குறிப்பாக பிள்ளையானின் செயலாளர் கலாநிதி விக்னேஸ்வரனின் சம்பளக் கொடுப்பனவுகளை ரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கைகளின் பின்னணியில் சமூக சேவைகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு நேரடித் தொடர்பு இருப்பதாக அந்த ஊடகம்; குறிப்பிட்டுள்ளது.
எந்தவித முன்னறிவித்தலுமின்றி செப்டம்பர் மாதம் முதல் விக்னேஸ்வரனது சம்பளக் கொடுப்பனவுகள் ரத்து செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களது செல்லிடத் தொலைபேசிகளில் உரையாடப்படும் தகவல்களை அரச புலனாய்வுப் பிரிவினர் இரகசியமாக ஒட்டுக் கேட்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
அரசாங்க உத்தரவுகளுக்கு அமைய செயற்படாத தமிழ் அரசியல்வாதிகளுக்கு எதிராக திட்டமிட்ட வகையில் அரசாங்கம் அடக்குமுறைகளை மேற்கொண்டு வருவதாக அந்த ஊடகத்தில்; குறிப்பிடப்பட்டுள்ளது.
நெருடல் இணையம்
|