பிரதான பக்கம்
உள்ளே..
எம்மைப் பற்றி
ஆசிரியர் தலையங்கம்
இலங்கைச் செய்திகள்
உலகச் செய்திகள்
நிழற்படத்தொகுப்பு
கட்டுரைகள்
காணொளி
ஏனையவை..
தொடர்புகளுக்கு..
News in English
சிறப்பு பக்கங்கள்





பொட்டு அம்மானின் விசேட உரை

10_11_07_poddu_right
பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களின் இறுதி வணக்க நிகழ்வின்போது..

சிறப்பு கட்டுரைகள்

மட்டக்களப்பு காத்தன்குடியில் இன்றும் சடலம் மீட்பு அச்சடித்து எடுக்க மின் அஞ்சல் மூலம் அனுப்ப…
Saturday, 11 October 2008

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான் குடி காவற்துறைப் பிரிவில் இன்றும் ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளது. நாவலடி கடலாராட்சி அம்மன் ஆலையத்திற்கு அருகாமையில் புதைக்கப்பட்ட நிலையில் இருந்த இந்தப் பழுதடைந்த சடலத்தை தகவல் ஒன்றின் அடிப்படையில் காவற்துறையினர் மீட்டுள்ளனர்.

சில நாட்களுக்கு மன்பு கொல்லப்பட்டு இந்த சடலம் புதைக்கப்பட்டு இருக்கலாம் என காவற்துறையினர் கூறுகின்றனர். இனம் காணப்படாத இந்த சடலம் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள், மற்றும் சுற்றி வளைப்புகளில் கைது செய்யப்பட்டவர்கள் பலர் கொல்லப்பட்டு பின் சடலங்களாக மீட்கப்பட்டு உறவினர்களால் அடையாளம் காட்டப்படும் நிலையில் இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளமை மேலும் அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.


நெருடல் இணையம்
Comments (0) >>
Write comment

உங்கள் கருத்துக்களை கீழுள்ள பெட்டியில் தமிழில் எழுதி அவற்றை பிரதிசெய்து மேலுள்ள பெட்டியில் இட்டு கருத்தை இணைக்கவும்.


 

© 2009 நெருடல் இணையம்
அனைத்து இணையதள சட்டங்களும் கடைப்பிடிக்கப்பட்டுள்ளது..