|
தமிழ் கூட்மைப்பில் சிலரை கொலை செய்ய சதி |
|
|
|
Sunday, 12 October 2008 |
|
தமிழ் மக்களின் ஏக பிரதி நிதிகளாக தெரிவு செய்யப்பட்ட தமிழ் கூட்டமைப்பில் சிலரை படுகொலை செய்ய இலங்கை இராணுவ துணைக்குழுக்கள் திட்டமிட்டுள்ளதாக
தென்னிலங்கையிலிருந்து சில வட்டாரங்கள் ஜயம் தெரிவித்துள்ளன.
பாராளுமன்றத்திற்குள் நுழைந்துள்ள தமிழ் தேச விரோத குழுக்கள் இவர்களின் மிக முக்கியமானவர்களை படுகொலை செய்வதன் ஊடாக அவர்களின் பலத்தை குறைக்கலாமெனவும் அவர்களின் செயற்பாட்டை முடக்கலாம் எனவும் இந்த விரோதிகள் எண்ணுவதாக தெரிவிக்கப்படுகிறது.
அரச படைகளின் கட்டுமானங்களிற்குள்ளும் அரச மட்டத்திற்குள்ளும் தேச விரோத சக்திகள் பலமாய் ஒன்றினைந்திருப்பதால் தமிழ் ஆதரவாளர்கள் தமிழ் அமைப்புக்களின் முக்கியஸ்தர்கள்
கொலை செய்யப்படலாமென தெரிவிக்கப்படுகிறது.
அதையடுத்து சில பிரபல தமிழ் ஊடகவியளாளர்கள்மீதும் இவர்களது பார்வை வீழ்ந்துள்ளதாக சில ஊடகவியளாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நெருடல் இணையம்
|