|

இந்திய புலனாய்வுத்துறையால் இயக்கப்படும் 'ஈ.என்.டி.எல்.எப்' ஒட்டுக்கும்பலின் லண்டனில் செயற்படும் கும்பல், ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் கருணா பிரிவுடன் இணைய உள்ளதாக ஊர்ஜிதமான வட்டாரங்கள் தெரிவித்தன
இது குறித்து மேலும் தெரியவருவதாவது:
'ஈ.என்.டி.எல்.எப்' ஒட்டுக்கும்பலானது 'ஒட்டம்மான்' கருணா புலிகளில் இருந்து அடித்து விரட்டிய பின், இந்திய புலனாய்வுத்துறையினரின் அனுசரனையுடன் திடீர் திருமணம் ஒன்றை ரிஎம்விபி ஒட்டுக்கும்பலுடன் செய்து கொண்டது. இக்கல்யாணத்திற்கு சீதனமாக ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலிடம் இருந்த நிதியில் பெரும் பகுதி ரி.எம்.வி.பி ஒட்டுக்கும்பலுக்கு வழங்கப்பட்டிருந்தது.
இதனை அடுத்து இந்தியாவின் பல பகுதிகளில் தங்க வைக்கப்பட்டிருந்த ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலின் பல உறுப்பினர்கள் கிழக்கு மாகாணம் கொண்டு செல்லப்பட்டு சிங்கள இராணுவ முகாங்களில் ரிஎம்விபி ஒட்டுக்கும்பலுடன் இணைந்து செயற்பட்டார்கள். அதேவேளை 'புளொட் மாமா' என்றழைக்கப்பட்ட முன்னால் புளொட் ஒட்டுக்கும்பலின் உறுப்பினரும், சுவிஸ் நாட்டில் பல படுகொலைகளை செய்ததற்காக சுவிஸ் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்ததனால் லண்டனில் ஒழிந்திருந்த 'வடிவேல் மகேந்திரன்' உட்பட்ட சிலரை 'ஈ.என்.டி.எல்.எப்' ஒட்டுக்கும்பலின் லண்டன் அமைப்பாளர் சிறிலங்கா தூதரகத்தால் வழங்கப்பட்ட போலிப்பாஸ்போட்டில் களவாக இலங்கைக்கு அனுப்பி அங்கு சிங்கள அரசின் உதவியோடு கிழக்கு இராணுவ முகாங்களில் செயற்பட்ட ரிஎம்விபி/ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பல் கூட்டோடு இணைந்து 'மாமனிதர்' சந்திரநேரு, கவுசல்யன், 'மாமனிதர்' ஜோசப் பரராஜசிங்கம் போன்றோரை படுகொலை செய்தார்கள்.
இக்கால கட்டத்தில் ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலின் லண்டனில் இயங்கி வந்த கும்பலானது 'ஒட்டம்மான்' கருணா, 'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' பிள்ளையான் போன்றோரிடம் தொடர்புகளை ஏற்படுத்தி விளம்பரப்படுத்துவதிலும், கொழும்பு, கிழக்கில் ரி.எம்.வி.பி ஒட்டுக்கும்பலினால் நடத்தப்பட்டு வந்த கப்பம் அறவிடல், ஆட்கடத்தல்களில் கூட பங்கும் வகித்து இருந்தார்கள்.
லண்டன் தமிழ்வாசி கூட கொழும்பில் ரி.எம்.வி.பி ஒட்டுக்கும்பலினால் கடத்தி கப்பம் அறவிடப்பட இக்கும்பலின் பங்கு முக்கியம் என்று கூறப்படுகிறது. அந்நபரது விடுதலைக்கு ஈ.என்டி.எல்.எப் லண்டன் கும்பலின் அடியாளும், கிரடிட்காட் மோசடிகளில் தண்டனை அனுபவித்தவருமான 'பவுடர்' தீபன் என்பவருக்கு ஊடாக கம்பம் செலுத்தி விடுதலையானதாக சில தகவல்கள் கூறுகின்றன.
இக்காலகட்டத்தில் ரி.எம்.வி.பி ஒட்டுக்கும்பலின் சர்வதேச நிதிப் பொறுப்பாளரான 'டாக்டர்' உண்டியல்தேவர் ஜெயதேவன், புங்குடுதீவு கிட்டினன் போறோருடன் இனைந்து ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலின் லண்டன் கும்பல் பெருங்கூத்துகள் கூட நடத்தினார்களாம்.
இந்நிலையில் சிங்களத்தின் பிரித்தாளும் சதிக்கு உட்பட்டு 'ஒட்டம்மான்' கருணா திடீரென கல்யாணத்தை முடிபுக்கு கொண்டு வந்தார்.
இதனால் ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலானது ஆட்பலத்தை இழந்தது மட்டுமல்லாது, பெரும்நிதியையும் 'ஒட்டம்மான்' கருணாவிடன் பறிகொடுத்தது. இதன் பின் இரு ஒட்டுக்கும்பல்களும் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தில் ஈடுபட்டும் வந்தார்கள்.
இவ்வொட்டுக்கும்பலின் கல்யாண முடிபுடன், லண்டனில் சேர்ந்து இயங்கி வந்த ரிஎம்விபி ஒட்டுக்கும்பலின் சர்வதேச நிதிப்பொறுப்பாளர் 'டாக்டர்' உண்டியல்தேவர் ஜெயதேவன் கும்பலுக்கும், ஈ.எ.டி.எர்ல்.எப் ஒட்டுக்கும்பலின் லண்டன் பொறுப்பாளர் ராம்ராஜுக்கும் இடையேயான உறவும் முடிபுக்கு கொண்டு வரப்பட்டு, 'ஈ.என்.டி.எல்.எப்' ஒட்டுக்கும்பலினால் லண்டனில் இருந்து நடாத்தப்படும் வானொலியில் இருந்து அடித்து விரட்டப்பட்டார்.
இதன் பின் இரு கும்பல்களும் களத்தில் மட்டுமல்ல புலத்திலும் தாங்கள் நடத்தி வந்த இணையத்தளங்களில் வசைபாடி வந்தது மட்டுமல்லாது கைகலப்புகளிலும் ஈடுபட்டார்களாம்.
ஆனால் கடந்த சில நாட்களாக லண்டனில் நடைபெற்று வரும் சம்பவங்கள், ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலின் 'பரந்தன் ராஜனின்' கட்டுப்பாட்டிலிருந்து மீறி லண்டன் ராம்ராஜ் தலைமையிலான கும்பல் செயற்பட்டு வருவதாக தெரிகிறது.
முதலாவதாக ராம்ராஜின் குடும்ப நிகழ்வொன்றில், ரி.எம்.வி.பி ஒட்டுக்கும்பலின் சர்வதேச நிதிப்பொறுப்பாளர் 'டாக்டர்' உண்டியல்தேவர் ஜெயதேவன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதாகவும், அதனை அடுத்து அண்மையில் கரோவில் பிரித்தானிய அமைச்சர்களுடனான தமிழ் மக்களின் சந்திப்புக்கு, கலகம் விளைவிக்க வந்த 'டாக்டர்' உண்டியல்தேவர் ஜெயதேவன் கும்பல், ஈ.என்.டி.எல்.எப் லண்டன் கும்பலின் ராம்ராஜ், பவுடர் தீபன் போன்றோரை அடியாட்களாக பிடித்து வந்ததாக ஆதாரங்களுடன் செய்திகள் வெளியாகி இருந்தன.
இத்தொடர் சம்பவங்கள் ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலின் லண்டன் கும்பலானது 'ஒட்டம்மான்' கருணா தலைமையிலான ரிஎம்விபி பிரிவில் இணைவதற்காக ஆரம்ப முயற்சிகள் என்று கூறப்படுகிறது. இதற்கு பதிலாக 'ஒட்டம்மான்' கருணாவினால் கடத்தல்கள், கப்பங்கள் மூலம் வசூலிக்கப்படும் நிதியில் ஒருபகுதியை பெறலாம் என்ற எண்ணமுமாம்.
இதற்கு ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்கும்பலின் தலைவர் பரந்தன் ராஜனின் பதில் என்னவாக இருக்கும் என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
நெருடல் இணையம்
|