|
25 லொறிகளில் வன்னிக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளது |
|
|
|
Monday, 13 October 2008 |
|
விடுவிக்கப்படாத பிரதேசங்களில் இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்காக 25 லொறிகளில் சுமார் 300 மெட்ரிக் தொன் எடையுடைய நிவாரணப் பொருட்கள் இன்றைய தினம் அனுப்பி வைக்கப்படவுள்ளது.
நிவாரணப் பொருட்களை அனுப்பி வைப்பதற்காக சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் திவாரத்ன தெரிவித்துள்ளார்.
கோதுமை மா, சீனி, அரிசி, பருப்பு மற்றும் மரக்கறி எண்ணெய் போன்ற பொருட்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நெருடல் இணையம்
|