|
அம்பாறையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது பொறிவெடித் தாக்குதல்: ஒருவர் பலி; ஐவர் காயம் |
|
|
|
Tuesday, 14 October 2008 |
|
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது நடத்தப்பட்ட பொறிவெடித் தாக்குதல்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
இது தொடர்பில் அம்பாறை மாவட்ட விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது:
கஞ்சிக்குடிச்சாறு வனப்பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் ஈடுபட்டிருந்தனர்.
இவர்கள் விடுதலைப் புலிகளின் பொறிவெடி வியூகங்களில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:40 நிமிடமளவில் சிக்கினர்.
இதில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். ஐந்து பேர் காயமடைந்தனர் என்று விடுதலைப் புலிகள் தெரிவித்தனர்.
நெருடல் இணையம்
|